Home /News /tamil-nadu /

கோட்சே குறித்து பேசிய விவகாரம்! கமல்ஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கிய கரூர் நீதிமன்றம்

கோட்சே குறித்து பேசிய விவகாரம்! கமல்ஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கிய கரூர் நீதிமன்றம்

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கமல் பேசியிருந்தார்.

  • News18
  • Last Updated :
    கரூர் மாவட்ட நீதிமன்றம் அரவக்குறிச்சியில் கோட்சே குறித்து பேசிய விவகாரத்தில் கமல்ஹாசனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

    கரூர் மாவட்ட அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசியிருந்தார். அவருடைய பேச்சு மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக, கரூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கமல் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக,
    முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார் கமல்ஹாசன். மனுவை விசாரித்த நீதிபதிகள், கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கமல்ஹாசன் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டனர். அதன்படி இன்று கரூர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் ஆஜரானார். அப்போது அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

    அதனையடுத்து, கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ‘மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்கள் அளித்த ஆதரவை, அரசியல் வல்லுநர்கள் கூட பேராதரவு என்றே வர்ணிக்கின்றனர். திணிப்பு நடவடிக்கைகள் மொழியாக இருந்தாலும், திட்டங்களாக இருந்தாலும் எங்கள் மீது திணிக்கக் கூடாது. இதுதொடர்பாக, தேவைப்பட்டால் சட்டப்போராட்டம் செய்வோம்’ என்று தெரிவித்தார்.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Kamal Haasan, Kamal hassan

    அடுத்த செய்தி