திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 67-வது பிறந்தநாள். திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்ல நேரில் வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும் தொண்டர்கள் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தங்களது தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட “என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
அன்பு சகோதரர் திரு. @mkstalin அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட “என் மனமார்ந்த வாழ்த்துக்கள்”
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.