மக்கள் நீதி மய்யத்தின் நான்காவது ஆண்டு தொடக்க விழா நாள் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆலோசகரிடம், 17 அறிஞர்கள் குழுமியிருந்தபோது பேசியதாக சொல்லிய கமல்ஹாசன், தான் தனது அரசியல் பயணத்தைக் குறித்த ஆலோசனையைக் கேட்டதாக பேசிவிட்டு, ஐந்து வருடங்களுக்குள் தனக்கான திட்டத்துக்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டதாக பேசியிருக்கியிறார். தொடர்ந்து பேசும் அவர், “நான் ஆக்டிவ்வாக இருக்கும்போது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அதற்குப் பிறகு சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மக்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்” எனப் பேசியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன், திமுகவின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியை குறிப்பிடும் விதமாக "நான் ஆரோக்கியமாக இருக்கும்போதே அரசியல் செய்துவிடவேண்டும். இப்போது எனக்கு 60 வயது ஆகிறது. மக்களுக்கு சேவை செய்யும் அந்த ஆக்டிங் லைப் எனக்கு வேண்டும். அஞ்சு வருஷம்தான். அதுக்கு அப்புறம் சக்கர நாற்காலியில எல்லாம் உட்கார்ந்துகிட்டு மக்களை தொந்தரவு செய்ய மாட்டேன்’’ என இவ்வாறு பேசியிருப்பதாக சமூக வலைதளங்களில் பொதுமக்களாலும், திமுகவினராலும் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார்.
Mr Kamal Hassan, "சக்கர நாற்காலியில் இருந்துக் கொண்டு தொந்தரவு தரமாட்டேன்" என்று சொன்னது அவருடைய எதிர்காலத்தை பற்றி...
Posted by Shalini on Thursday, February 25, 2021
என்ன ஒரு கேவலமான பிறவி இந்த @ikamalhaasan!
நீ வாங்கும் நாலு ஓட்டுக்கு மாற்றுத்திறனாளிகளை இழிவு செய்ய வேண்டுமா?! 🗣💦#மன்னிப்புகேள்_கமல் pic.twitter.com/ahLcE7nr9L
— இசை (@isai_) February 25, 2021
ஊனமுற்றோர் என்று அழைக்கப்படும்போது, உடல் குறைபாடு கொண்ட சம மனிதர்களின் மனம் பாதிக்காமல் இருக்க மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்க செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கட்டணங்கள் ரத்து, திருமண நிதியுதவி, அரசுப் பேருந்தில் துணையாளருடன் பயணம் மேற்கொண்டால் ¼ சதவிகித கட்டண சலுகை, அரசு ஊழியர்களாயின் அவர்களது பயணப்படி ரூ.150-ஆக இருந்து ரூ.1000 ஆக உயர்வு, இந்தியாவிலேயே முதல் முறையாக இலவச மூன்று சக்கர ஸ்கூட்டர், அரசு வேலை வாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு சிறப்பாணை, உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோருக்கு சிறப்பு விடுமுறை, வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் மற்றும் சமத்துவபுரங்களில் 3 சதவிகித வீடு ஒதுக்கீடு செய்தல், தொகுப்பூதியத்தில் 2 ஆண்டுகள் பணி நிறைவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியமுறை வழங்கி பணி நிரந்தரம்/ காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நவீன காதொலி கருவி, நவீன கணினி பயிற்சி, சிறப்பு பள்ளி விடுதிகளில் தங்கி படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இரண்டு மடங்கு உணவுக் கட்டணம், மற்றும் பல அரசு திட்டங்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK leader Karunanidhi, Kamalhaasan, Physically challenged