எங்கும் வருவோம் உமைத் தடுக்க...! டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டுக்கு கமல்ஹாசன் காட்டமான விமர்சனம்

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கும் வருவோம் உமைத் தடுக்க...! டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டுக்கு கமல்ஹாசன் காட்டமான விமர்சனம்
கமல்ஹாசன்
  • News18
  • Last Updated: May 9, 2020, 7:15 PM IST
  • Share this:
டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வில்லை என்று  டாஸ்மாக் மதுக்கடைகளை வரும் 17ம் தேதி வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கறிஞர் ராஜேஷ், மக்கள் நீதி மய்யம் உள்பட பல்வேறு தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நீதிமன்றம் இப்படி உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.


இதனை விமர்சித்துள்ள கமல்ஹாசன், “குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம்
தமிழக அரசு.
எங்கும் வருவோம் உமைத் தடுக்க.மக்கள் நீதியே வெல்லும்." என்று ட்வீட் செய்துள்ளார்.தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


First published: May 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading