முழு பலம், மொத்த சொத்து, எல்லாமே நீங்கள்தான் - கமல்ஹாசன்

முழு பலம், மொத்த சொத்து, எல்லாமே நீங்கள்தான் - கமல்ஹாசன்
கமல்ஹாசன்
  • News18 Tamil
  • Last Updated: February 21, 2020, 12:14 PM IST
  • Share this:
மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, வாக்களித்து ஆதரித்து வரும் மக்களுக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த கமல்ஹாசன், 2018 ஆம் ஆண்டு, பிப்.21-ம் தேதி, மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கினார். கட்சி தொடங்கிய ஓராண்டில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம், 3.72 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.  இந்நிலையில், இன்று, மக்கள் நீதி மய்யம் 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

"பல கேள்விகள், சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்தப் பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை, முழு பலம், என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள்தான். வாக்களித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியைச் சொல்லில் இன்றி, தமிழகத்தைப் புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்" என ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.
First published: February 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்