தமிழகத்திற்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், டெல்லியில் ஜே.என்.யூ. மாணவர்கள் தாக்கப்பட்டது கவலை அளிக்கிறது. மாணவர்களுக்கே இது நேர்ந்தது பீதியை ஏற்படுத்துகிறது. இது அநீதி, இந்த சர்வாதிகார போக்கு மாற வேண்டும் என வலியுறுத்தினார்.
சி.ஏ.ஏ. விவகாரத்தில் அதிமுக மாறி மாறி பேசி வருகிறது. அவர்களது வியாபாரம் நடக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அதனை செய்கிறார்கள் என்றார். ஆங்கிலோ இந்தியன் நியமன சட்டப்பேரவை உறுப்பினர் நீக்க முடிவு குறித்து பதில் அவர், அளித்த எல்லோருக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாட்டில் நாடோடிகளாக பல நூற்றாண்டுகளாக இருப்பவர்கள் அவர்கள். அவர்களும் இந்தியர்கள் தான். அவர்கள் எங்கே செல்வார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய கமல், தமிழகத்தை இருக்க வேண்டிய இடத்திற்கு கொண்டு வந்து வைக்க வேண்டிய கடமை அனைத்து தமிழர்களுக்கும் உண்டு. உழைப்பு, வியர்வை, செல்வம் உள்ளிட்டவற்றை முதலீடாக செய்ய வேண்டும். ரஜினிகாந்துக்கும் இந்த கடமை உண்டு எனத் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.