ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதாரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கருங்கல்பாளையம் பகுதியில் பரப்புரை செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், “சின்னம், கொடி , கட்சி எல்லாம் தாண்டியது தேசம். ஜனநாயகம் வழியாகவும் சர்வாதிகாரம் வந்தடைந்தற்கு பல சான்றுகள் இருக்கிறது. இன்று இந்தியாவிலும் அது நடந்து கொண்டு இருக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் எனக்கும் உறவு இருக்கிறது. அவரும் பெரியார் பேரன். நானும் பெரியாரின் பேரன். பெரியார் காந்தியாரின் தம்பி. இன்று விட்டு போன கடமையை செய்ய வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்திற்காக இல்லை. இங்கே வந்திருப்பதும் ஆதாயத்திற்கும் லாபத்திற்கும் இல்லை” என கூறினார்.
மேலும், “விஸ்வரூபம் படம் வெளியான போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார். கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டும் என கேட்டார். இது தேச பிரச்சினை அல்ல. நான் பார்த்துகொள்கின்றேன் என்றேன். இப்போது உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் இருக்கின்றேன் என்றார் ஸ்டாலின்”
தொடர்ந்து பேசிய அவர், “நம் நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். அதற்கு என் ஆதரவை கொடுக்க வேண்டியது இந்தியனாக என் கடமை. நாம் கட்சிக்காக என்பதை விட அறத்தின் சார்பாக வாக்களிக்க போகிறோம் என நினைத்து கொள்ளுங்கள்.
விமர்சனங்களை பின்பு பார்த்துக்கொள்ளலாம் இப்போது வீடே போக போகிறது. ஈஸ்ட் இந்தியா கம்பெனி முடிந்து நார்த் இந்தியா கம்பெனி வந்து இருக்கிறது.
இந்த கூட்டத்துடன் இருப்பது எனக்கு பெருமை. நான் வந்தற்காக காரணத்தை என் தோழர்கள் ஏன் என கேட்கமாட்டார்கள். மய்யம் வாதம் என்பது நடுநிலையில் இருப்பது அல்ல. மக்களின் நலன் என வரும் போது நியாயத்தின் பக்கம் இருப்பதே. என் பயணத்தை பாருங்கள் பாதை புரியும். நாளை நமதே!” என கூறி உரையை முடித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK Karunanidhi, Erode Bypoll, Erode East Constituency, Kamal Haasan