முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சிஸ்டம் சரி இல்லை என்று கூறும் பலரிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லை - கமல்ஹாசன்

சிஸ்டம் சரி இல்லை என்று கூறும் பலரிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லை - கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய கவுரவம் வாக்காளர் என்ற அடையாளம் என கூறியுள்ளார் கமல் ஹாசன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சிஸ்டம் சரி இல்லை என்று கூறும் பலரிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

2017-ஆம் ஆண்டில் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும், சிஸ்டத்தை மாற்றினால்தான் தமிழகம் உருப்படும் என்றும் கூறினார். அன்று முதல் நெட்டிசன்களின் tag line-ஆக மாறிப்போனது இந்த வாசகம். தற்போது வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கமல் ஹாசன், சிஸ்டம் சரி இல்லை, எல்லோரும் திருட்டு பயல்கள் என்று கூறும் பலரிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லை என்று ரஜினியை சீண்டியுள்ளார்.

18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய கவுரவம் வாக்காளர் என்ற அடையாளம் என கூறியுள்ள கமல் ஹாசன், வாக்காளன் தனது கடமையை சரிவர செய்யாத சமூகம், தன்னுடைய உரிமைகளை தன்னால் இழந்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்ளவும் கமல் ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

பீகார் தேர்தலில் 12 வாக்குகள் வித்தியாசத்தில் ஒருவர் வெற்றி அடைந்ததை சுட்டிக்காட்டியுள்ள கமல் ஹாசன், இல்லத்தரசிகளின் வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தி படைத்தவை என்றும் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்

First published:

Tags: Kamal Haasan, Makkal Needhi Maiam