பெரியார் - ரஜினிகாந்த் விவகாரத்தில் தமிழக அரசியல் சூழல் பரபரப்பாகியுள்ள நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு ட்வீட் போட்டுள்ளது. அது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துக்ளக் விழாவில் பெரியார் பற்றி ரஜினிகாந்த் பற்றி பெரியார் பேசிய விவகாரம் தமிழக அரசியல் பரபரப்பான ஒன்றாக மாறியுள்ளது. ரஜினிகாந்துக்கு ஆதரவாக பாஜக கருத்துக்களை வெளியிட, எதிராக திமுக, அதிமுக மற்றும் பல கட்சிகள் கருத்துக்களை கூறியுள்ளன.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தான் கேட்ட கருத்துக்களை வைத்து துக்ளக் விழாவில் பேசியதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் கூறினார்.
இது தொடர்பாக பல தரப்புகளில் இருந்தும் சூடான கருத்துக்கள் அரசியல் களத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், கமல்ஹாசன் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், அவரின் கட்சி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளது.
வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய ஒன்றை, அவரின் புகைப்படத்தோடு அக்கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
இந்த சேதி ரஜினி தரப்புக்கா? அல்லது அவரை எதிர்க்கும் தரப்புக்கா? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.