மக்கள் நீதி மய்த்தின் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கமல்ஹாசன் பெயர் இடம்பெறாததால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர்களை கோவையில் கமல்ஹாசன் இன்று அறிவித்தார். தேர்தலில் கமல் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் போட்டியிடவில்லை. மேலும் சிவகங்கை தொகுதியில் சிநேகன் போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
மேலும் பல்லக்கில் ஏறி அமருவதை விட, இவர்களுக்காக ஊர் ஊராக பல்லக்கை சுமப்பதில் பெருமை அடைகிறேன் என்றும் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்:
சாத்தூர் தொகுதியில் சுந்தர்ராஜ், விளாத்திகுளம் தொகுதியில் நட்ராஜ் ,தஞ்சாவூர் தொகுதியில் துரைஅரசன், ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்கவேல் போட்டியிடுகின்றனர்.
இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் வளரும் தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வளரும் தமிழகம் போட்டியிடும் தொகுதிகள்
சோளிங்கர் - மலைராஜன், குடியாத்தம் - வெங்கடேசன், திருப்போரூர் - கருணாகரன் போட்டியிடுகின்றனர்.
இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர்கள்
பரமக்குடி - உக்கிரப்பாண்டியன் ஆகியோர் மநீம இடைத்தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் - அருண் சிதம்பரம், மானாமதுரை - ராமகிருஷ்ணன், பெரியகுளம் - பிரபு போட்டி
பாப்பிரெட்டிபட்டி - நல்லதம்பி, அரூர்- குப்புசாமி, நிலக்கோட்டை - டாக்டர் சின்னதுரை, பூந்தமல்லி - பூவை ஜெகதீஷ், பெரம்பூர் - பிரியதர்ஷினி, ஓசூர் - ஜெயபால், ஆம்பூர் - நந்தகோபால், கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் மகேந்திரன், திருப்பூர் - வி.எஸ்.சந்திரகுமார், பொள்ளாச்சி - மூகாம்பிகை ரத்னம்
கடலூர் - வி.அண்ணாமலை, விருதுநகர் - வி.முனியசாமி, தென்காசி - முனீஸ்வரன் போட்டி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
Also Watch
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.