கமல்ஹாசன் மன அழுத்தத்தில் உள்ளார் - அமைச்சர் கடம்பூர் ராஜு

அமைச்சர் கடம்பூர் ராஜூ

கமல்ஹாசன் அரசியலில் கால் வைத்துவிட்டு மன அழுத்தத்தில் உள்ளார். அதனை அவர் சரி செய்தால் அவரது உடலுக்கும் நல்லது; அவரது நிலைப்பாட்டிற்கும் நல்லது என்றார் கடம்பூர் ராஜூ.

  • News18
  • Last Updated :
  • Share this:
'நடிகர் கமல்ஹாசன் அரசியலில் கால் வைத்துவிட்டு மன அழுத்தத்தில் உள்ளார்’ என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாரில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: கமல்ஹாசன் அரசியலில் கால் வைத்துவிட்டு மன அழுத்தத்தில் உள்ளார். அதனை அவர் சரி செய்தால் அவரது உடலுக்கும் நல்லது; அவரது நிலைப்பாட்டிற்கும் நல்லது.

கமல் தற்போது நல்ல மனநிலையில் இல்லை. அவரது 'விஸ்வரூபம்’ படத்திற்கு பிரச்னை வந்தபோது நாட்டை விட்டே வெளியோறப் போவதாக அறிவித்தார். அவரை நாட்டை விட்டு வெளியே போக விடாமல் பிரச்னையை தீர்த்தது இந்த அரசுதான்.

கடந்த ஆட்சியில் திமுகவை சேர்ந்த ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மட்டுமே சினிமா துறையில் இருந்தது. ஆனால் இன்று யார் வேண்டுமானாலும் படம் எடுக்கும் சூழல் உள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பல மாதங்களாக பிரச்னை இருந்து வருகிறது. நடுநிலையாளர்களை வைத்து நடிகர் விஷால் பிரச்னையை தீர்த்திருக்கலாம். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால்தான் தமிழக அரசு தலையிட வேண்டிய சூழ்நிலை எற்பட்டது.

சங்கக் கணக்குகள் தொடர்பாக புகார் எழுந்துள்ளது. அதனை சட்டப்படி ஆராய வேண்டியது அரசின் கடமை. அதை தான் அரசு செய்துள்ளது என்றார் கடம்பூர் ராஜூ.

Also watch

Published by:DS Gopinath
First published: