பரிசுப் பெட்டியைக் கொடுத்து கஜானாவை தூக்கிச் செல்வார்கள் - டிடிவிவை கிண்டலடித்த கமல்ஹாசன்

குடிநீரில் சாக்கடை கலக்கக்கூடாது என்பது தெரியாதவர்கள் எப்படி இந்த நாட்டை ஆள விட்டோம் என்று நம்மை நாமே தலையிலடித்துக் கொண்ட நிலையில் இருக்கிறோம்.

news18
Updated: April 12, 2019, 1:47 PM IST
பரிசுப் பெட்டியைக் கொடுத்து கஜானாவை தூக்கிச் செல்வார்கள் - டிடிவிவை கிண்டலடித்த கமல்ஹாசன்
கமல்ஹாசன்
news18
Updated: April 12, 2019, 1:47 PM IST
பரிசு பெட்டியைக் கொடுத்துவிட்டு கஜானாவை கொண்டு சென்றுவிடுவார்கள், சின்னப் பெட்டியை காட்டி பெரிய கட்டிடத்தைக் கட்டி விடுவார்கள் என்று டிடிவி தினகரனை கிண்டல் செய்து மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் தஞ்சையில் பேசியுள்ளார்.

தஞ்சாவூர் நாடாளுமன்ற மக்கள் நீதி மைய வேட்பாளர் சம்பத் ராமதாஸ், கூட்டணி கட்சியான வளரும் தமிழகம் சார்பில் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் துரைசாமி ஆகிய இருவரையும் ஆதரித்து தஞ்சை சிவகங்கை பூங்காவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை செய்தார்.

அவர் பேசுகையில், “நாங்கள் வசதியாக இருந்தவர்கள்தான் எல்லாமே சினிமாவில் சம்பாதித்தது. ஆனால், நாட்டிற்கு நல்லது செய்ய முடியாது. அது எந்த பணக்காரனானாலும் முடியாது. அம்பானி, டாட்டா உள்ளிட்ட யாராலும் முடியாது.

அதை ஒரு அரசால் மட்டுமே செய்ய முடியும்.  நீங்கள் அனைவரும் மாற்றத்தை நோக்கி நகர வேண்டும் டிடிவி மூன்றாவதாக துளிர்விட்ட இலை, அவர்கள் யார், இந்த கூட்டம் என்ன செய்தது அவர் நன்றாக சிரிக்கிறார் அவர் நன்றாக அரசியல் செய்வார் என்று நம்புகிறோம். ஆனால் அது எப்படி முடியும் உங்களுக்கு பரிசு பெட்டியைக் கொடுத்துவிட்டு கஜானாவை கட்டிக் கொண்டு போய்விடுவார்கள். பரிசு பெட்டியை கொடுப்பதாக சின்ன பெட்டியைக் கொடுத்துவிட்டு பெரிய கட்டிடங்களை கட்டி விடுவார்கள்” என்று கூறினார்.மேலும், “குடிநீரில் சாக்கடை கலக்கக்கூடாது என்பது தெரியாதவர்கள் எப்படி இந்த நாட்டை ஆள விட்டோம் என்று நம்மை நாமே தலையிலடித்துக் கொண்ட நிலையில் இருக்கிறோம். காவேரி காவேரி என்று சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறோம்.

ஆனால் நம்முடைய விவசாயிகளுக்கு பயத்தை போக்கி அவர்களுக்கு பன்முகத்தன்மையை கற்றுத்தர வேண்டும். அவர்கள் செய்யும் தொழிலுக்கு இப்போது கிடைக்கும் லாபத்தை விட நூறு மடங்கு லாபம் பெற அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் அதை செய்ய முடியும் அதை தான் நாங்கள் செய்யப்போகிறோம். ” என்று கமல்ஹாசன் மக்களிடையே பேசினார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...