உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அக்கட்சியி்ன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தல் முழுமையான மக்களின் தேர்வாக இருக்க போவதில்லை என்ற உண்மை அனைவரும் அறிந்தது என கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கு பெறுவதால் முன்னேற்றம் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்றும் தவணை முறையில் மாற்றத்தை பெறுவதில் எந்த சாதனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகையால், 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பதை லட்சியமாக கொண்டு மக்கள் நீதி மய்யம் செயல்படும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.