Exclusive | அவள் என்ன வாக்குறுதிகள் கூறியிருக்கிறாளோ அதை செய்வாள்: கமலா ஹாரிஸின் சித்தி

2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் எடுக்கப்பட்ட குடும்பப் படத்தில் கமலா ஹாரிஸ் (வலது) தாய் ஷியாமலா கோபாலன் (இடது) மற்றும் சித்தி சரலா கோபாலனுடன்

ஆப்பரிக்கரை திருமணம் செய்து கொண்ட போது முதலில் குடும்பத்தில் ஏற்பு இல்லை. ஆனால் என் அம்மா உடனே ஒப்புக் கொண்டார்.

  • Share this:
அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமலா ஹாரிஸ் சித்தி டாக்டர் சரலா கோபாலன் நியூஸ்18 தமிழ்நாடுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், 290 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இது குறித்து அவரது சித்தி டாக்டர் சரலா கோபாலன் நியூஸ்18 தமிழ்நாடுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “ கடுமையான உழைப்பால் இந்த வெற்றி கிடைத்தது. குடும்பம் உறுதுணையாக இருந்தது. சின்ன வயது முதல் கமலாவை தெரியும். நல்ல குழந்தை. அப்பா அம்மாவுடன் வருவாள். எல்லோரிடமும் ஆசையாக இருப்பாள். எப்போதும் சித்தி என்று தான் கூறுவாள். எனது கணவரை சித்தப்பா என்று தான் கூறுவாள்” என்றார்.

மேலும் படிக்க...இது தொடக்கமே தவிர முடிவல்ல - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி உரை

அதனைத் தொடர்ந்து பேசியவர்,” எனது அக்கா 18 வயதில் அமெரிக்கா சென்றாள். பிராமண குடும்பத்தில் பழமைவாத ( conservative)  சிந்தனைகள் கொண்டிருந்தாலும் பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என என் தந்தை நினைத்தார். என் அக்கா தானாகவே அமெரிக்காவில் படிக்க விண்ணபித்திருந்தார்.

பொதுவாக குடும்பத்தில் யாரும் ஒத்துக்க மாட்டார்கள். ஆனால் என் தந்தை ஒப்புக் கொண்டார். ஆப்பரிக்கரை திருமணம் செய்து கொண்ட போது முதலில் குடும்பத்தில் ஏற்பு இல்லை. ஆனால் என் அம்மா உடனே ஒப்புக் கொண்டார். திருமணத்தை தி இந்து நாளிதழில் அறிவித்து ஏற்றுக் கொண்டனர்” என்றார்.

உறவினர்களுடன் கமலா ஹாரிஸ்


அதன் பிறகு பேசியவர் ,” நான்கு வருடம் முன்பு செனடர் ஆன போது சென்று அவளை பார்த்தோம். இப்போது முடிந்தால் போவோம். அவருடைய அரசியல் பற்றி தெரியாது. நீ சந்தோசமா இருக்கியா என்று தான் கேட்பேன். அவள் என்ன வாக்குறுதிகள் கூறியிருக்கிறாளோ அதை செய்வாள் என்று நம்பிக்கை” இருக்கிறது.
Published by:Vaijayanthi S
First published: