அமெரிக்காவில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய தமிழ் வம்சாவளி தேர்வு - தலைவர்கள் வாழ்த்து
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளரா இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதற்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

கமலா ஹாரிஸ்
- News18 Tamil
- Last Updated: August 12, 2020, 4:32 PM IST
It is a moment of pride for Indians and TamilNadu especially, as Kamala Harris, the first Indian senator, whose mother hails from TamilNadu has been nominated as the Vice Presidential candidate by the US Democratic party. My hearty wishes to her. #KamalaHarris pic.twitter.com/6le16uS0oV
— O Panneerselvam (@OfficeOfOPS) August 12, 2020
இதுதொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டர் பதிவில், ‘அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட பெண்ணின் மகளான கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பது இந்தியர்களுக்கும் குறிப்பாக தமிழர்களுக்கும் பெருமை தரக் கூடிய நிகழ்வு’ என்று குறிப்பிட்டுள்ளார்.
It’s really a matter of pride that Democratic Presidential nominee @JoeBiden has chosen US politician of Indian Tamil origin @KamalaHarris as his VP running mate for the US Presidential elections. I wish Kamala Harris the best in the US elections. Good to see the inclusiveness. pic.twitter.com/PsJY3SRzBi
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 12, 2020
இதுதொடர்பான தி.மு.க எம்.பி கனிமொழி ட்விட்டர் பதிவில், ‘அமெரிக்காவில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளது உண்மையில் பெருமைக்குரிய விஷயம். அதிபர் தேர்தலுக்கு அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.