Home /News /tamil-nadu /

'சூழலியல் ஓர்மையற்ற அரசு விரட்டியடிக்கப்பட வேண்டும்' - கமல்ஹாசன் காட்டம்

'சூழலியல் ஓர்மையற்ற அரசு விரட்டியடிக்கப்பட வேண்டும்' - கமல்ஹாசன் காட்டம்

கமல்ஹாசன் ட்வீட்

கமல்ஹாசன் ட்வீட்

நவக்கரையில் மீண்டும் ஒரு யானை ரயிலில் அடிபட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கோவை மாவட்டம் மதுக்கரை அருகேயுள்ள நவக்கரை பிரிவு பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானை ரயில் மோதி படுகாயமடைந்தது. வாளையார் ஆற்றில் தண்ணீர் அருந்திவிட்டு தண்டவாளத்தை கடக்க யானை முயன்றபோது அவ்வழியே சென்ற திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் யானைக்கு, தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மதுக்கரை பகுதியில் இருப்புப்பாதையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், ரயில்வே மற்றும் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    யானைகள் மரணம் அதிகரித்திருப்பது பற்றி மநீம தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறது. நவக்கரையில் மீண்டும் ஒரு யானை ரயிலில் அடிபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சூழியல் ஓர்மையற்ற அரசு விரட்டியடிக்கப்பட வேண்டும்.



     

    இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், யானைகள் மரணம் அதிகரித்திருப்பது பற்றி மநீம தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறது. நவக்கரையில் மீண்டும் ஒரு யானை ரயிலில் அடிபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சூழியல் ஓர்மையற்ற அரசு விரட்டியடிக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Elephant, Kamal Haasan

    அடுத்த செய்தி