தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூறிய கருத்தை நான் வழிமொழிகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், ‘நாடு முழுவதும் நடந்து கொண்டு இருக்கும் விவாதங்களில், கேலி செய்வதில் பிரிவினையின் பிரதிபலிப்பு எல்லா இடத்திலும் இருக்கும். நாடு முழுவதும் நடக்கும் ஒரு அவலம் இது. அதன் பிரதிபலிப்பாக இருக்க கூடும்.
படவாய்ப்புகள் குறைந்ததால் அரசியலுக்கு வருவதாக முதலமைச்சர் அவரது விரும்பங்களைத் தெரிவிக்கிறார். தொடர்ந்து சொல்லி கொண்டு இருப்பதால் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஊராட்சிக்கும் மாநகராட்சிக்கும் உள்ள வித்தியாசம் எங்களுக்கு தெரியும். ஆனால் எங்களுக்கு தெரியாது என்பது அவர்கள் கருத்து.
தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது என்று நடிகர் ரஜினியின் கருத்தை வழி மொழிவதைத் தவிர வேறு வழி அல்ல. ரஜினி தான் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்பது மு.க.அழகிரியின் கருத்து. நாட்டில் இதற்கான சுதந்திரம் உள்ளது.
நல்ல தலைமைக்கு ஆள் இல்லை என்பது தான் வெற்றிடம். நல்ல தலைமை இருந்தார்கள் என்பதில் பொய் இல்லை என்பதை மறுக்க முடியாது. இன்று இல்லை என்று சொல்வதற்கு வருத்தப்பட்டு பிரஜோனம் இல்லை. நல்லவர்கள், வல்லமையர்கள் தலைமை ஏற்றாலும் பிசகுகள் நடக்காமல் இருக்காது. அதற்கு விமர்சனங்கள் வந்தே தீரும். அதை ஏற்று கொள்ளும் தன்மை பழைய தலைவர்களுக்கு இருந்தது. நவீன தலைவர்களுக்கும் இருக்க வேண்டும். இது, ஜனநாயகத்தின் பங்காளியாக என்னுடைய கருத்து.
உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.