தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அனைத்துகட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இன்று அரசியல் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்தநிலையில், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
, ‘ஜனநாயகக் கடமையினை கட்சித் தலைவனாக செய்யும் அரிய வாய்ப்பினை தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கின்றது. இது என் முதல் தேர்தல். களமிறங்கல். வாழ்த்துகளை எதிர்பார்க்கின்றேன்.
என்னுடைய தேர்தல் வியூகம் நேர்மைதான். எங்களிடம் இருக்கும் இந்த நேர்மை மற்றவர்களிடம் இருக்காது. எங்களின் திட்டத்தையும் செழுமையும் நம்பி களமிறங்கி இருக்கின்றோம். கோவை மனதுக்கு இனிய ஊர்களில் ஒன்று. இங்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். ஏற்றத்திற்கு காரணமானவர்கள் இருக்கின்றனர்.
கோவை மக்களின் வாழ்த்து மழையில் நனைந்தபடி வேட்பு மனு தாக்கல் இனிதே நிகழ்ந்தது. கொங்கின் சங்கநாதம் கோட்டையில் முழங்கட்டும். வெற்றி நமதே! pic.twitter.com/YGokrvXsVT
இங்கே மத நல்லிணக்கம் இல்லாமல் செய்ய முயற்சிகள் நடக்க இருக்கின்றது. அதற்கு எதிரான குரலாக நாங்கள் இருப்போம். மான்செஸ்டர் என்ற புகழ் மங்காமல் இருக்க பணிசெய்வோம். கோவை தெற்கு தொகுதியில் பல பிரச்சினைகள் இருக்கின்றது. அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
ALSO READ : 'மே 2ம் தேதிக்கு பின் கமல்ஹாசன் பிக்பாஸ் போகலாம்' - வானதி சீனிவாசன் விமர்சனம்
கோவை மண்டலத்திற்கு தேவையான விமான விரிவாக்கம், மெட்ரோ போன்றவை செய்யப்படாமல் இருக்கின்றது. முன்மாதிரி தொகுதியாக இந்த தொகுதியை மாற்ற முடியும். out sider என என்னை சொல்ல மாட்டார்கள். வேறு மொழி பேசும் நபர்கள் இங்கு வந்திருக்கின்றனர். நான் தமிழன், என் நண்பர்கள், உறவினர்கள் இங்கு இருக்கின்றனர். Out sider என்ற கேள்வி ஊடக ஊந்தலாக இருக்கலாம்.
இனி கோவையை மையமாக வைத்துக்கொண்டு பிரச்சாரம் இருக்கும். அரசியல் எங்களுக்கு தொழிலல்ல. அரசியல் எங்கள் கடமை என தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.