நாளை டாக்டர் பட்டம்! இன்று ஒடிசா மாநில முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு

நாளை டாக்டர் பட்டம்! இன்று ஒடிசா மாநில முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு
கமல்ஹாசன், நவின் பட்நாயக்
  • News18
  • Last Updated: November 18, 2019, 8:41 PM IST
  • Share this:
ஒடிசா மாநில முதல்வர் நவின் பட்நாயக்கை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இதுவரை தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் பத்மஸ்ரீ , பத்மபூஷன் மற்றும் பிரான்ஸ் அரசின் செவாலியே உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். ஏற்கெனவே அவர் கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். இந்தநிலையில், கமல்ஹாசனுக்கு ஒடிசா மாநில செஞ்சுரியன் பல்கலைகழகம் கமல்ஹாசனுக்கு இரண்டாவது முறையாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.

நாளை நடைபெறும் விழாவில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டத்தை வழங்குகிறார். இந்தநிலையில், கமல்ஹாசன் ஒடிசா மாநிலத்துக்குச் சென்றுள்ளார். அங்குச் சென்றுள்ள அவர் அம்மாநில முதல்வர் நவின் பட்நாயக்கைச் சந்தித்து பேசினார்.


அந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ‘மிகப் பெரும் பின்னணியைக் கொண்ட அவரைத் தொடர்ந்து கவனித்துவருகிறேன். அவரிடமிருந்து வரும் அறிவுரை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். அவரிடமிருந்து கற்றுக்கொள்கிறேன். அவரிடம் தனியாக பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.

Also see:


Loading...

First published: November 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com