சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் - கமல்ஹாசன்

சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் - கமல்ஹாசன்
கமல்ஹாசன்
  • Share this:
சாத்தான்குளம் லாக்கப் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் முடிவு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது, "சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே!

குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்.

CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள்.


காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி."

Also see:
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading