ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாக கருத வேண்டும், அபராதம் விதிக்க வேண்டும் - கமல்ஹாசன்

ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாக கருத வேண்டும், அபராதம் விதிக்க வேண்டும் - கமல்ஹாசன்
  • News18
  • Last Updated: October 28, 2019, 7:20 AM IST
  • Share this:
ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும் என்று கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது. குழந்தையை மீட்க 2 நாட்களாக மீட்புப் பணியினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பயனளிக்காததால் ரிக் என்று சொல்லக் கூடிய அதி நவீன இயந்திரங்களை கொண்டு வந்து குழந்தையை மீட்பதற்காக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அழ்துளை கிணற்றுக்கு அருகே புதிதாக துளையிடப்படும் இடத்தில் அதிகமாக பாறைகள் இருப்பதால் பணி மெதுவாக நடக்கிறது. சிறுவன் சுர்ஜித்தை மீட்பதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது


இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது. ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.Also watch

First published: October 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com