என்னதான்டா பிராப்ளம் உங்களுக்கு? கமலின் கடைசி நிமிட பிரசார வீடியோ!!

மாலை ஆறு மணி முதல் தேர்தல் பிரசார வீடியோக்கள் ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாலை 5.57 மணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் பிரசார வீடியோ ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

news18
Updated: April 16, 2019, 8:12 PM IST
என்னதான்டா பிராப்ளம் உங்களுக்கு? கமலின் கடைசி நிமிட பிரசார வீடியோ!!
கமல் ஹாசன்
news18
Updated: April 16, 2019, 8:12 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடைசி நேரத்தில் வெளியிட்ட பிரசார வீடியோவில், அரசியல் கட்சிகள் அனைத்தையும் கடுமையாக சாடியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணி முதல், வாக்குப்பதிவு முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது.

மேலும் தொலைக்காட்சி, ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் வாயிலாக பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பு அல்லது தேர்தல் தொடர்பான ஆய்வு முடிவுகளைக் காட்சிப்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது. மாலை ஆறு மணி முதல் தேர்தல் பிரசார வீடியோக்கள் ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாலை 5.57 மணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் பிரசார வீடியோ ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

அந்த வீடியோவில், ‘தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க பிரசார வாசகங்களை பேசி, அக்கட்சிகளை விமர்சனம் செய்கிறார். இந்த வீடியோவை மாலை 5.57 மணிக்கு கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றினார். அதனை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் ட்விட்டர் பக்கம் 5.59 மணிக்கு ரீ ட்விட் செய்துள்ளது. ஆறு மணிக்கு மேல், பிரசார வீடியோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளநிலையில், அதற்கு ஒரு நிமிடத்துக்கு முன் கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டு அசத்தியுள்ளார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...