மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

 • Share this:
  தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க மட்டும் தனியாக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் ட்விட்டர் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

  கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின்


  அதைப்போல, தமிழக அரசியல் கட்சித் தலைவர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  அப்போது, உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார். உதயநிதி ஸ்டாலினுக்கும் கமல்ஹாசன், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: