திருச்சியில் தேர்தல் பிரச்சாரம்: கொரோனா நடவடிக்கைகளை மீறியதாக கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் தேர்தல் பிரச்சாரம்: கொரோனா நடவடிக்கைகளை மீறியதாக கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன்

திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கொரோனா நடவடிக்கைகளை மீறியதாக கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்திக்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று பேசினார். இந்தக் கூட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறி, கூட்டம் கூடியதாகவும், பிரசாரம் செய்ததாகவும் கமல்ஹாசன் உள்ளிட்ட 650 பேர் மீது கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் திருச்சியில் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தார்.
திருச்சி  அண்ணாசிலை, காந்தி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறி, கூட்டம் கூடியதாகவும், பிரசாரம் செய்ததாகவும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட 1,500 பேர் மீது திருச்சி கோட்டை, காந்தி சந்தை காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் பத்மநாதன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா தொற்று மீண்டும் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் தலைவர்கள், வேட்பாளர்கள் கூட்டத்தைத் தவிர்க்கவும் பிரச்சாரக் கூட்டங்களில் தனி நபர் இடைவெளியைப் பின்பற்றவும் முகக் கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் அனைத்துக் கட்சிகளின் பிரச்சாரங்களிலும் இடைவெளியின்றியும் முகக் கவசம் அணியாமலும் மக்கள் கூடி ச்வருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் தலைவர்கள், வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: