ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

2024 லோக்சபா தேர்தல்: திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்? - கமல் சொன்ன சூசக தகவல்!

2024 லோக்சபா தேர்தல்: திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்? - கமல் சொன்ன சூசக தகவல்!

மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன்

மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன்

விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

டெல்லியில் வரும் 24ம் தேதியன்று ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ளவுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை 100 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொடங்கிய இந்த யாத்திரையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள ஹோட்டலில் மக்கள் நீதி மய்யம் மாநில நிர்வாக குழு செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளருடன் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை ஈடுபட்டார்.

இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் துணை தலைவரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மவுரியா, ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் டெல்லியில் வரும் 24ம் தேதி கலந்துகொள்கிறார் என கூறினார். மேலும், ஜனநாயகத்தை பாதுகாக்க ராகுல் காந்தி யாத்திரையில் கமல் கலந்து கொள்ள இருப்பதாக விளக்கமளித்தார்.

கமல்ஹாசனிடம் கூட்டணி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “எந்த திசை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறேன் என்பதை என் பயணத்தை புரிந்துக்கொண்டாலே புரியும். விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்வேன்” என தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், காங்கிரஸ் யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். இது 2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும்  கமல்ஹாசனும் திமுக  கூட்டணியில் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

First published:

Tags: CM MK Stalin, Congress, DMK, Kamal Haasan