Home /News /tamil-nadu /

சூர்யாவுக்கு எனது ஆதரவு உண்டு! புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் ஆதரவு கரம் நீட்டும் கமல்

சூர்யாவுக்கு எனது ஆதரவு உண்டு! புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் ஆதரவு கரம் நீட்டும் கமல்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்து தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.

  • News18
  • Last Updated :
    சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கின்றது. சூர்யாவுக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்து, கடந்த சனிக்கிழமை நடிகர் சூர்யா விமர்சித்து பேசியிருந்தார். அப்போது, ‘புதிய கல்விக் கொள்கையை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். இல்லையென்றால், அதனை நம் மீது திணித்துவிடுவார்கள்’என்று தெரிவித்தார்.

    அவருடைய பேச்சு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக புதிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. சூர்யாவின் பேச்சு பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அறைவேக்காட்டுத்தனமாக சூர்யா பேசுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இந்தநிலையில், சூர்யாவுக்கு சீமான், கீ.வீரமணி உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துவந்தனர். இந்தநிலையில், சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அவருடைய அறிக்கையில், ‘ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்து தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.

    மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்ட வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கின்றது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Kamal hassan, Surya

    அடுத்த செய்தி