எம்.ஜி.ஆரின் நீட்சி நான்: மதுரையில் கமல் ஹாசன் அறிவிப்பு

எம்.ஜி.ஆரின் நீட்சி நான் என்று மதுரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் நீட்சி நான் என்று மதுரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வருகின்ற தேர்தலில் வெற்றி பெற அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டி போட்டு கொண்டு தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த நிலையில் கமல்ஹாசன் மதுரையில் தனது முதல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். மதுரையில் அவர் சென்ற இடத்தில் எல்லாம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

  இதற்காக. மதுரை வந்த அவர், மேல மாசி வீதியில் தொண்டர்கள் மத்தியில் பிரசார பயணத்தை தொடர்ந்தார். திறந்தவெளி வாகனத்தில் பிரசாரத்தை ஆரம்பித்த போதும், அவர் பேசவில்லை. கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், தொண்டர்கள் மற்றும் ரசிகளை பார்த்து கையசைத்தவாறு வாகனத்தில் ஊர்வலமாக சென்றார். அப்போது, அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் உற்சாகமாக குரல் எழுப்பினர்.

  திறந்தவெளி வாகனத்தில் பிரசாரத்தை ஆரம்பித்த போதும், அவர் பேசவில்லை


   

  பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், புரட்சி தலைவர்எம்.ஜி.ஆர் மதுரையை 2 வது தலைநகரமாக. மாற்ற ஆசை பட்டார். அதன் நீட்சி தான் நான் என்றும் என்னடா இப்படி சொ ல்றேனு நினைக்க. வேண்டாம் என்றும் கூறி மாற்றம் ஏற்படுத்துவோம் என தெரிவித்தார்.

  மேலும் படிக்க...மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் மதுரையை 2-வது தலைநகரமாக மாற்றுவோம் - கமல்ஹாசன்

  மேலும் நாங்கள் மநீம ஆட்சிக்கு வந்தால் மதுரையை 2 வது தலைநகரமாக மாற்றுவோம். மீண்டும் ஒரு புரட்சிக்கு தயாராக வேண்டும். அதன் ஆரம்பம் தான் இந்த விழா என தொண்டர்கள் மத்தியில் பேசினார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: