டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போது தான் வருகிறார் - அதிருப்தியை வெளிப்படுத்திய கமல்

டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போது தான் வருகிறார் - அதிருப்தியை வெளிப்படுத்திய கமல்
  • Share this:
பாதுகாப்புக் கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி விநியோகம் குறித்து பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்த்தேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாள்கள் ஆன நிலையில் பிரதமர் மோடி தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் உரையாற்றினார். அப்போது, ‘ஊரடங்குக்கு 130 கோடி மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். வரும் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் மாடியில் நின்று டார்ச் விளக்கை ஒளிரச் செய்யவேண்டும்’ என்று பேசியிருந்தார். பலரும் எதிர்பார்த்த முக்கியமான விவகாரங்கள் குறித்து எதுவும் பேசவில்லை.

இதுகுறித்த கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



Also see:
First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading