• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குடிப்பதற்கு தண்ணீர் இல்லை; வாஷிங் மெஷின் கொடுக்கிறார்கள்? - தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் காட்டம்

குடிப்பதற்கு தண்ணீர் இல்லை; வாஷிங் மெஷின் கொடுக்கிறார்கள்? - தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் காட்டம்

பிரச்சாரத்தில் கமல்ஹாசன்

பிரச்சாரத்தில் கமல்ஹாசன்

குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. வாஷிங் மெஷின் தருகிறார்கள். எங்குபோய் அடித்துக் கொள்வது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 06-ம் தேதி அன்று நடைபெறவிருக்கின்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுகின்ற மக்கள் நீதி மையம் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக தாம்பரம் சண்முக சாலையில் வேட்பாளர் சிவ இளங்கோவை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

    தாம்பரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மையம் கமல்ஹாசன், ‘நாங்கள் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. இருக்கின்ற வசதி போதுமானது. மக்கள் சேவைக்காக தான் அரசியலுக்கு வந்து இருக்கின்றோம். இங்கு இருக்கின்ற ஒவ்வொரு மக்களின் தலையிலும் 65 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. குடிக்க தண்ணீர் இல்லை. வாஷிங் மெஷின் தருகிறார்கள் எங்கு போய் அடித்து கொள்வது. எங்களுக்கு பேச கற்று கொடுத்து மக்கள் தான். நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்கள் எனக்கு கற்று கொடுத்தது. அனைத்து பகுதிகளுக்கும் செல்ல தாம்பரத்தில் நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ பொறாமைப்படும் அளவிற்கு அமைக்க வேண்டும். குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். பாதாளச் சாக்கடை பணி விரைவில் முடிக்கப்படும். தாம்பரத்தில் பாலம் பாதியில் நிற்கிறது. அவர்களுக்கு பாலம் என்பது லாபம் என்று கேட்டு இருக்கிறது. வேலையை முடித்து விட்டு லாபம் எடுப்பரகள். ஆனால் இவர்கள் லாபத்தை மட்டும் எடுத்து கொள்கிறார்கள். கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து தியாகராய நகரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பழ.கருப்பையாவிற்கு ஆதரவாக மேற்கு மாம்பலத்தில் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் இருந்து பிரச்சாரம் செய்த அவர், ‘எம்.ஜி.ஆர் நடித்த திருடாதே படத்தை எத்தனை முறை பார்த்தாலும் இவர்கள் திருந்தப்போவதில்லை. தாங்கள் போட்ட திட்டங்களை செயல்படுத்த முடியாதவர்கள், நான் தீட்டிய திட்டத்தை காப்பி அடித்தால் கூட அவர்கள் அதையும் செயல்படுத்த மாட்டார்கள்’என்று விமர்சித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: