சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனைமுன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், துணைத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ் ஆகியோர் மக்கள் நீதி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தேர்தல் வாக்குகுறுதிகளில் முக்கிய வாக்குறுதிகளை கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது பேசிய அவர், ‘வீட்டுப் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய், 1,500 ரூபாய் என்பதை எதை வைத்து நிர்ணயம் செய்தீர்கள். இல்லத் தரசிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். மக்கள் கேண்டின் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
அதில், ராணுவ கேண்டின் போல, நியாயமான விலையில் மக்களுக்கு பொருள்கள் வழங்கப்படும். வாஷிங்மெஷின் கொடுத்து அதன் பில் மக்கள் தலையிலேயே ஏற்றப்படுகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களை ஒரு அமைப்பாக கொண்டுவர வேண்டும் என்பது எங்களது ஆசை. தற்சார்பு கிராமங்களை உருவாக்குவோம். சிறுகுறு தொழில்களுக்கான மூலப் பொருள்களை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும்.
ஒரு தலைநகர் செழிப்பாக இருந்தால் மட்டும் போதாது. மாநிலத்தின் அனைத்து நகரங்களும் வளர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும். 6 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ள நிலையில் கூடுதல் இலவசங்கள் அறிவித்தால் கூடுதல் சுமை அதிகரிக்கும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் திட்டங்கள் நிறைவேற்றக் கூடியவை. நீட் தேர்வுக்கு மாற்றாக மாநில அரசு நடத்தக் கூடிய seet என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படும்’ என்று தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.