முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாராலிம்பிக் போட்டி - மாரியப்பன் தங்கவேலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

பாராலிம்பிக் போட்டி - மாரியப்பன் தங்கவேலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

கமல்ஹாசன், மாரியப்பன்

கமல்ஹாசன், மாரியப்பன்

பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கப் பதக்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றது. ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஆகஸ்டு 24ந்தேதி தொடங்குகிறது. இந்தியாவின் சார்பில் 40 ஆண்கள் 14 பெண்கள் கொண்ட அணியினர் ஜப்பானுக்கு செல்கின்றனர். இந்திய அணிக்கு தமிழ்நாட்டின் சேலம் மாவட்டதைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர்தான் ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். ஒலிம்பிக்கில் இந்திய கொடியை ஏந்தப் போகும் முதல் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில் தலைநகர் ரியோவில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேல் தங்கம் வென்றார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள ஜப்பான் செல்ல இருக்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இரு தினங்களுக்கு முன்னர் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது, மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருடனும் உரையாடினார். இந்தநிலையில், பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள மாரியப்பனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘டோக்கியோவில் நடக்கவிருக்கும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு இந்திய வீரர்களின் அணி பயணப்படுகிறது. அவ்வணியின் தலைவராகக் கொடியேந்திச்செல்லவிருப்பவர் நம் மாரியப்பன் தங்கவேலு. பெருமையோடு வாழ்த்திவிட்டுக் காத்திருப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Kamal hassan, Mariyappan Thangavelu