இந்தியாவெங்கும் நிகழ வேண்டும் - அனைத்து சாதியினர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதற்கு கமல்ஹாசன் பாராட்டு

கமல்ஹாசன்

அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 • Share this:
  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்ட மசோதா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 51 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது. எனினும், வழக்குகள் காரணமாக அதை நிறைவேற்ற முடியாமல் இருந்தது. இந்தநிலையில் ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற, சட்டத்தின் வாயிலாக 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

  சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 58 கோவில்களில் 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு, ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற, சட்டத்தின் படி, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதற்கு பா.ஜ.கவின் மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணிய சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வேன் என்று தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இருப்பினும், தமிழக அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயல்திட்டங்களுள் ஒன்று.

  அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.  தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: