தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கமலின் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாகக் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளின் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. 142 தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கோவைத் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு 1,725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் 3.7 சதவீதமாக இருந்த வாக்குவங்கி, சட்டமன்றத் தேர்தலில் 2.45 சதவீதமாக குறைந்தது. அதனைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுக்குப் பிறகு கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளான முருகானந்தம், சி.கே.குமரவேல், சந்தோஷ் பாபு என ஒவ்வொருவராக கட்சியிலிருந்து வெளியேறினார். அனைவரும், தோல்விக்கு முக்கிய காரணம் கமல்ஹாசன்தான் என்று குற்றச்சாட்டு வைத்தனர். அதனையடுத்து, கட்சியை சீரமைப்பேன். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். இந்தநிலையில், இன்று காலை 11 மணிக்கு இணையவழியில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், கட்சியின் புதிய நிர்வாகிகள் பெயர்களை வெளியிட்டார்.
கமல்ஹாசன், கட்சித் தலைவர் என்ற பொறுப்புடன் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பையும் கூடுதலாக ஏற்றுச் செயல்படவுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய நிர்வாகிகள்:
1.பழ.கருப்பையா - அரசியல் ஆலோசகர்
2.பொன்ராஜ் - அரசியல் ஆலோசகர்
3.ஏ.ஜி.மௌரியா - துணைத் தலைவர் - கட்டமைப்பு
4.தங்கவேலு - துணைத் தலைவர் - களப்பணி மற்றும் செயல்படுத்துதல்
5.செந்தில் ஆறுமுகம் - மாநிலச் செயலாளர் - தகவல் தொழில்நுட்பம் மற்றும் செய்தித் தொடர்பு
6.சிவ.இளங்கோ - மாநிலச் செயலாளர் - கட்டமைப்பு
7.சரத்பாபு - மாநிலச் செயலாளர் - தலைமை நிலையம்
8.ஸ்ரீப்ரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர்
9.ஜி.நாகராஜன் - நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.