கட்சியில் உறுப்பினரல்லாதவர்களும் விருப்பமனு - புதிய விதிமுறைகளுடன் விருப்ப மனு அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்

கட்சியில் உறுப்பினரல்லாதவர்களும் விருப்பமனு - புதிய விதிமுறைகளுடன் விருப்ப மனு அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்

கமல்ஹாசன்

தமிழகம், புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட மார்ச் 21-ம் தேதி விருப்ப மனு பெறப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘நடைபெற இருக்கும் 2021-ம் ஆண்டு தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களிலும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் களம் காண்கிறது. சீரமைப்போம் தமிழகத்தை - புதியதோர் புதுவை செய்வோம் எனும் நமது இருபெரும் கனவுகளை நனவாக்க வேண்டிய சரித்திர முக்கிய்த்துவம் வாய்ந்த தருனம் இது. நமது கட்சி நேர்மையாளர்களின் கூடாரம். திறமையாளர்களின் கோட்டை. துணிச்சல் மிக்கவர்களின் பாறை. நாம் தமிழகத்தின் பாதுகாப்பு படை.
    ஊழலற்ற நேர்மையான ஆட்சியின் மூலமாக பொருளியலைச் சீரமைத்து தமிழகத்தை வளமாக்க முடியும். அதற்குரிய தகுதியும் அருகதையும் நமக்கு மட்டுமே உண்டு என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். நாம் செல்லும் இடங்களிலெல்லாம் ஆர்ப்பரிக்கும் வெள்ளமே அதற்கு சாட்சி.

    இந்தத் தேர்தலில் வென்று மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய முடியும் எனும் நம்பிக்கை உடையவர்கள் பிப்ரவரி 21-ம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். ஒருவரே எத்தனை தொகுதிகளுக்கு வேண்டுமானுலும் விண்ணப்பிக்கலாம். தகுதியான வேட்பாளரை பரிந்துரைத்தும் விருப்ப மனுக்களை அனுப்பலாம்.

    இந்தமுறை ஆன்லைனிலேயே சுலபமாக விண்ணப்பிக்கும் வகையில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்திய அரசியல் கட்சிகளிலேயே ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி விருப்பமனுக்களைப் பெறும் கட்சி எனும் பெருமையை அடைகிறோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பிலாதவர்கள் தலைமை அலுவலகத்தில் விண்ணப்ங்களைப் பெற்று தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். கட்சியின் உறுப்பினராக இல்லாதவர்களும் கூட தங்களுக்கு சட்டமன்ற உறுப்பினராவதற்குரிய தகுதியும் திறமையும் மக்கள் பணியில் ஆர்வமும் நேர்மையும் இருக்கிறதென கருதினால் விண்ணப்பிக்கலாம். ஒரு தொகுதிக்கு ஒருமுறை விண்ணப்பிக்க 25,000 ரூபாய் நிதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொகை கட்யின் தேர்தல் செலவீனங்களுக்காக பயன்படுத்தப்படும். தங்களது விண்ணப்பம் தேர்வானாலும் ஆகாவிட்டாலும் இத்தொகை திருப்பி அனுப்பப்படமாட்டாது. நேர்மையான ஜனநாயகத்துக்கான உங்கள் பங்களிப்பாக அத்தொகை இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: