தமிழகத்தில் அடுத்தாண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கி தீவிரமாக பணியாற்றத் தொடங்கியுள்ளன. தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்கி தீவிரமாக பணியாற்றிவருகிறது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நாம் தமிழர் கட்சிக்கு அவர்கள் விரும்பிய விவசாயி சின்னத்தையும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு அவர்கள் விரும்பிய குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் கட்சிக்கு அவர்கள் விரும்பிய டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்படவில்லை. புதுச்சேரி தொகுதியில் மட்டும் டார்ச்லைட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாறாக தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. டார்ச்லைட் கேட்டு மக்கள் நீதி மையம் தாமதமாக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே டார்ச்லைட் தினத்தை முன்னிறுத்தி கமல்ஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் வேறு சின்னம் கேட்டு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு மக்கள் நீதி மையம் தள்ளப்பட்டுள்ளது. தற்போது, மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூட டார்ச் லைட் சின்னம்தான் இடம்பெற்றிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் அக்கட்சியின் டார்ச்லைட் சின்னத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துள்ள நிலையில் சின்னத்தை இழந்துள்ளது. அதனால், புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கக் கூடிய நெருக்கடியில் ஈடுபட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal hassan, Makkal Needhi Maiam