இடைத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? கமல்ஹாசன் விளக்கம்

இடைத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? கமல்ஹாசன் விளக்கம்
கிராம சபைக் கூட்டத்தில் கமல்ஹாசன்
  • News18
  • Last Updated: October 2, 2019, 4:27 PM IST
  • Share this:
பணப்பட்டுவாடா நடைபெறுவதாலேயே இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கமல்ஹாசன், கடந்த ஆண்டே கிராம சபைக் கூட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கடந்த முறை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இந்தநிலையில், இன்று காலை திருவள்ளூர் மாவட்ட பழவேற்காடு லைட் அவுஸ் குப்பம் கிராமசபைக் கூட்டத்தில் கமல்ஹாசன் பார்வையாளர்களாக கலந்துகொண்டார். அந்த பகுதிகளின் அடிப்படை பிரச்சனைகள் குறித்த கலந்துரையாடலும் அதற்கான தீர்வுகளுக்கான முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

அவரது கட்சி உறுப்பினர்கள் பலரும் தமிழ்நாடு முழுக்க கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதன் அவசியம் குறித்து, துண்டுப் பிரசுரம் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிராம சபைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ‘பணப்பட்டுவாடா நடைபெறுவதால் இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை. பழவேற்காடு பகுதியில் மாதம் ஒருமுறை மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன். இந்தப் பகுதியில் அரசு மருத்துவமனை அமைத்தால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மருத்துவர்களை அனுப்பத் தயார். பழவேற்காடு ஏரிக்கு பாதிப்பு ஏற்பட்டால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.


Also see:

First published: October 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...