ஹெச்.ராஜா குரலைக் கேட்டு டி.வியை உடைக்கும் கமல்! வைரலாகும் பிரசார வீடியோ

Karthick S | news18
Updated: April 12, 2019, 9:06 PM IST
ஹெச்.ராஜா குரலைக் கேட்டு டி.வியை உடைக்கும் கமல்! வைரலாகும் பிரசார வீடியோ
கமல்ஹாசன்
Karthick S | news18
Updated: April 12, 2019, 9:06 PM IST
அரசியல்வாதிகளின் பேச்சுகளைக் கேட்டு ஆத்திரமடைந்து டிவியை உடைத்து, நாட்டின் அவலங்களை கமல்ஹாசன் விளக்கும் வகையில் பிரசார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது மக்கள் நீதி மய்யம். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியின் தலைவர்கள் களத்தில் இறங்கி வாக்குச் சேகரிப்பது ஒருவகையாக இருந்தாலும், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளியிட்டும் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பது வழக்கமான ஒன்றாகும்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்கள் விரும்பும் பிரபலமான நடிகர் என்பதால் அவரே, அவர் கட்சி சார்ந்த விளம்பரங்களில் நடித்துவருகிறார்.

அந்த வகையில், இதுவரையில் தமிழகம் மற்றும் இந்தியாவை ஆண்ட கட்சிகளை கடுமையாக விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒன்றின் மூலம் மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்கு கேட்கிறார் கமல்ஹாசன்.

அந்த வீடியோவில் முதலில் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பின்போது பேசிய "கலைஞரின் மகனாக கேட்கிறேன்’ என்ற ஆடியோ கேட்கிறது. அதனைக் கேட்டு கமல் எரிச்சல் அடைகிறார். அடுத்ததாக, பிரதமர் மோடியின் குரல் கேட்கிறது. மீண்டும் வெறுப்படையும் கமல் தொலைக்காட்சி சேனலை மாற்றுகிறார்.அடுத்து, ஹெச்.ராஜாவின் குரல் கேட்கிறது. அதீத கோபத்தில் டி.வியை உடைக்கிறார். அதன்பிறகு, பார்வையாளர்களை நோக்கி பேசும் கமல்ஹாசன், ‘முடிவு பண்ணீட்டங்களா? யாருக்கு ஓட்டு போடப்போறீங்க... குடும்ப அரசியல் பண்ணி நாட்டேயே குழி தோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா, நம்ம உரிமைக்காக போராடிய நம்மள அடிச்சு துரத்துனாங்களே அவங்களுக்கா...

கார்பரேட் கை கூலியாக மாறி, நம்மள மக்களையே சுட்டு கொன்னாங்களே அவங்களுக்கா... அனிதாவின் அப்பா, அம்மாவிடம் கேளுங்கள் யாருக்கு வாக்கு பதிவு செய்யவேண்டும் என்று கேளுங்கள். அவர்கள் சொல்வார்கள்’ என்று காத்திரமாக பேசுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...