அரசு மருத்துவமனைகள் சாக்கடை போல் உள்ளன: கமல் விமர்சனம்

அரசு மருத்துவமனைகள் சாக்கடை போல் உள்ளன: கமல் விமர்சனம்

கமல்ஹாசன்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் சாக்கடைகள் போல் உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

 • Share this:
  சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த மாதம் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். மாவட்டம் தோறும் பிரசாரம் செய்து வரும் அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பர்கூர் பகுதியில் கொட்டும் மழைக்கு இடையே குடை பிடித்தவாறு பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மக்களிடம் கொள்ளை அடிக்கும் கொள்ளையர்களுக்கு ஓட்டு போடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் திறந்தவெளி வேனில் பிரசாரம் செய்த அவர், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த இந்த பகுதியில் குடிநீரின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த பிரச்சனைகளுக்கு மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

  இதனைத்தொடர்ந்து குடியாத்தம் பேருந்து நிலையத்தில் பேசிய கமல்ஹாசன். எங்கு பார்த்தாலும் திறந்த வெளி சாக்கடைகளாகவும், குப்பை மேடாகவும் காணப்படும் இப்பகுதி தேர்தலுக்குப் பின் சீரமைக்கப்படும் எனக் கூறினார்.

  இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்பதை சிலர் கிண்டலடிப்பதாகக் குறிப்பிட்ட கமல்ஹாசன் அது நடந்தே தீரும் என்றும், அதன் பலனை தாய்மார்கள் அனுபவிப்பபார்கள் என்றும் கூறினார்.

  மேலும் படிக்க...கொரோனா 2-வது அலையால் ஊரடங்கு.. தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழப்பு..

  வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை , வேலை தரும் முதலாளியாக மாற்றுவதற்காக முயன்று கொண்டிருக்கிறோம் என்றும் கமல்ஹாசன் பேசினார்.

  தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் சாக்கடைகள் போல் இருப்பதாக கமல்ஹாசன் விமர்சித்தார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: