தேர்தல் அறிக்கை மட்டுமல்ல எங்கள் நேர்மையையும் கழகம் பிரதிஎடுத்தால் மகிழ்வேன் - கமல்ஹாசன் சாடல்

தேர்தல் அறிக்கை மட்டுமல்ல எங்கள் நேர்மையையும் கழகம் பிரதிஎடுத்தால் மகிழ்வேன் - கமல்ஹாசன் சாடல்

கமல்ஹாசன்

எங்கள் நேர்மையையும் பிரதி எடுத்துக்கொண்டால் மகிழ்வேன் என்று தி.மு.கவை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

  • Share this:
தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திமுக-வின் பொதுக் கூட்டம், திருச்சி சிறுகனூரில் நடைபெற்றது. இதற்கு 350 ஏக்கர் பரப்பளவில் ஒன்றரை லட்சம் பேர் அமரும் வகையில், பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்கும் குடும்பத் தலைவியர் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்ட அவர், ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று பிரச்சாரக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியிருந்தார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின், அதனை ஒத்த திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மு.க.ஸ்டாலின் தன்னுடைய திட்டத்தை காப்பியடித்துவிட்டார் என்று கமல்ஹாசனும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும் குற்றம் சாட்டிவருகின்றனர்.


இதுதொடர்பாக கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எங்கள் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பிரதியெடுத்துக் கொண்ட கழகம் எங்கள் நேர்மையையும், தூய்மையையும் கைக்கொண்டால் மகிழ்வேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: