தமிழ்நாட்டில் பிப்ரவரி 19-ம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றுள்ள நிலையில் அனைத்து கட்சித் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் சந்திப்பை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘நாம் தலைவர்களை தேட கூடாது. சமூக சேவகர்களைத் தேட வேண்டும். ஏழ்மையை இங்கே தக்க வைத்துக்கொண்டு இருக்கின்றனர். அதை நீங்கள் நீக்க வேண்டும். பெண்கள் பார்ட் டைம் அரசியல் செய்தாலே நாடு புல் டைம் நன்றாக மாறிவிடும். உங்களை மிரட்டும் ரவுடிகள் கூட்டம் பெரிது தான். அது கூட்டம் மட்டுமே. இது சங்கமம். ரௌடிகளுக்கு பயம் வர வேண்டும்.
அது நேர்மையால் மட்டுமே முடியும். விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் நம்மால், மலம் அள்ளும் என் தம்பிக்கு ஒரு இயந்திரம் கண்டுபிடிக்க முடியாதா? ஒரு ரூபாய் சம்பளம் என்று கூறிவிட்டு ஊரை கொள்ளையடிக்கும் பழக்கம் எனக்கில்லை. சிலைகள் வைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. காக்கைக்கு கக்கூஸ் தேவை இல்லை. இந்த ஆட்சி திருப்தி இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். நாளை முதல் தீவிர பரப்புரை
ஆளுநர் எங்களை மதிக்க வேண்டும். ஏஜெண்டாக செயல்பட கூடாது. மத்திய அரசு சொல்வதை ஆளுநர் கேட்கிறார். ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்றால் மதுரை உயர் நீதிமன்றத்தில் இருந்து தான் துவங்கம் வேண்டும். தமிழ்நாட்டை ஒரு போதும் பாசிசம் ஆள கூடாது என்பது என் கருத்து’ என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.