Home /News /tamil-nadu /

ஜனநாயகத்தின் மீது நடைபெற்றத் தாக்குதல்! காஷ்மீர் விவகாரத்தில் கமல்ஹாசன் கண்டனம்

ஜனநாயகத்தின் மீது நடைபெற்றத் தாக்குதல்! காஷ்மீர் விவகாரத்தில் கமல்ஹாசன் கண்டனம்

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப் பிரிவுகள் இயற்றப்பட்டதற்கு வரலாறு உண்டு. எனவே, அதில் மேற்கொள்ளப்படுகின்றன எந்த மாற்றமும் தகுந்த ஆலோசனையுடன் நடைபெற்றிருக்கவேண்டும்.

  • News18
  • Last Updated :
    காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு மற்றும் 35-ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல் என்று மக்கள் நீதி மய்யம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

    காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நீக்கப்பட்டது என்று மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

    இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல். இதுபோன்ற முக்கியமான முடிவுகள் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய எவ்வித விவாதத்தையும் மேற்கொள்ளாமல், தங்களுக்கு அவையில் இருக்கின்ற பெரும்பான்மை ஒன்றினை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய அரசு இம்முடிவினை எடுத்திருக்கின்றது.


    370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப் பிரிவுகள் இயற்றப்பட்டதற்கு வரலாறு உண்டு. எனவே, அதில் மேற்கொள்ளப்படுகின்றன எந்த மாற்றமும் தகுந்த ஆலோசனையுடன் நடைபெற்றிருக்கவேண்டும். 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை சட்டப்பூர்வமாக நீக்கப்படுவது குறித்து தனியான விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

    ஜனநாயகத்தில் எதிர்குரல்களை முடக்கும் இந்த அரசின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது. சென்ற முறை பண மதிப்பிழப்பு, இந்த முறை 370 சட்டப் பிரிவு நீக்கம் என்று தொடர்ந்து சர்வாதிகாரமும் பிற்போக்குத்தன்மையும் கொண்ட செயல்களாகவே இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Also see:
    Published by:Karthick S
    First published:

    Tags: Kamal hassan

    அடுத்த செய்தி