ஊட்டி மலை ரயில் தனியாருக்கு வாடகை - ரயில்வே துறைக்கு கமல்ஹாசன் கண்டனம்

ஊட்டி மலை ரயில் தனியாருக்கு வாடகை - ரயில்வே துறைக்கு கமல்ஹாசன் கண்டனம்

கமல்ஹாசன்

ஊட்டி மலை ரயிலை இயக்குவதற்கு தனியாருக்கு அனுமதி அளித்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் மார்ச் 25-ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்காரணமாக, நீலகிரி மாவட்டத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஊட்டி மலை ரயில் இயக்கமும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் இப்போது நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறையில் அனுமதிக்கப்பட்டுகின்றனர். மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் சேவையும் தொடங்கியது. ஆனால், இந்த சேவையை தெற்கு ரெயில்வே தனியார் நிறுவனத்திற்கு ஜனவரி மாதம் வரை குத்தகைக்கு விட்டுள்ளது.

  இந்த மலை ரெயில் டி.என்.43 என பெயரிடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.475 ஆக இருந்த மலை ரெயில் கட்டணம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏழை, எளிய மக்கள் இந்த ரெயிலில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

  டிசம்பர் 5, 6 ஆகிய நாட்களில் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதேபோல் 12 மற்றும் 13 ஆகிய நாட்களிலும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதில் உள்ள வரவேற்பைப் பொருத்து ஜனவரியில் இருந்து, தினமும் தனியார் மலை ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மலை ரெயிலை முற்றிலும் தனியார்மயமாக்கும் முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதுதொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்தது. அந்த விளக்கத்தில், ‘கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் மார்ச் 25-ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்காரணமாக, நீலகிரி மாவட்டத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஊட்டி மலை ரயில் இயக்கமும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் இப்போது நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறையில் அனுமதிக்கப்பட்டுகின்றனர். மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் சேவையும் தொடங்கியது. ஆனால், இந்த சேவையை தெற்கு ரெயில்வே தனியார் நிறுவனத்திற்கு ஜனவரி மாதம் வரை குத்தகைக்கு விட்டுள்ளது.

  இந்த மலை ரெயில் டி.என்.43 என பெயரிடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.475 ஆக இருந்த மலை ரெயில் கட்டணம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏழை, எளிய மக்கள் இந்த ரெயிலில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

  டிசம்பர் 5, 6 ஆகிய நாட்களில் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதேபோல் 12 மற்றும் 13 ஆகிய நாட்களிலும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதில் உள்ள வரவேற்பைப் பொருத்து ஜனவரியில் இருந்து, தினமும் தனியார் மலை ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மலை ரெயிலை முற்றிலும் தனியார்மயமாக்கும் முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது’ என்று குறிப்பிட்டது.


  இந்தநிலையில், மலை ரயிலை தனியார் நிறுவனம் இயக்குவதற்கு அனுமதி அளித்தது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘பண்டிகை நாட்களை ஒட்டிய விடுமுறை தினங்களில்தான் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள். கூட்டம் கூடும் தினங்களில் ஊட்டி மலை ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து இயக்கினால், டிக்கெட் விலை பன்மடங்காகத்தான் இருக்கும். எந்தச் சிறிய கொண்டாட்டமும், குதூகலமும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமையை ரயில்வே உருவாக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: