மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள்! அழைப்புவிடுக்கும் கமல்ஹாசன்

ஒற்றைக் கல்வி முறை, ஒற்றைக் கலாச்சாரமாக இல்லாமல், பன்முகத்தன்மையோடு கற்க வேண்டும். கல்வி வெறுமனே கற்காமல் புரிதலோடு இருக்க வேண்டும்.

மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள்! அழைப்புவிடுக்கும் கமல்ஹாசன்
கமல் ஹாசன்
  • News18
  • Last Updated: October 15, 2019, 10:35 PM IST
  • Share this:
மாணவர்கள் ஏன் அரசியலில் ஈடுபடாமல் எத்தனை நாள் மாணவர்களாகவே இருப்பீர்கள். மாற்றத்தை நிகழ்த்த அரசியலில் மாணவர்கள் தேவை, அவர்களை முதல் ஆளாக வரவேற்பேன் என கமலஹாசன் கேட்டுக்கொண்டார்.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 88-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில்
அப்துல்கலாம் கனவுகளை நிறைவேற்றுவதில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.


பின்னர் மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், பாடலாசிரியர் சினேகன், இளங்கோவன், குமரவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய ஐசரி கணேசன், ‘நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாள் அன்று கலைத் துறையில் 60 ஆண்டுகள் நிறைவடையும் விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார்’ என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், ’முதல்முறை அப்துல்கலாமை விமானத்தில் சந்தித்த போது அவர் என் அருகே வந்து அமர்ந்து இந்தியாவைப் பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க என்று கேட்டார்? அந்த கேள்வி மிகவும் முக்கியம். ஒரு இந்தியன் இந்தியாவைப் பற்றி எப்படி நினைக்கிறார்கள் என்பது முக்கியம்.பழமையயை எதிர்க்கவும் மாட்டோம், புதியவை என்ற ஒரே காரணத்திற்காக ஆதரிக்கவும் மாட்டேன். யார் எதை சொன்னாலும் அதை ஏற்றுகொள்ளாமல் பகுத்தறிவு மூலம் ஆய்வு செய்யுங்கள். திறன்மேம்பாடு தான் இந்தியாவின் அடுத்த சத்தியாகிரக இயக்கமாக எடுத்து செல்லவேண்டிய ஒன்று. ஒற்றைக் கல்வி முறை, ஒற்றைக் கலாச்சாரமாக இல்லாமல், பன்முகத்தன்மையோடு கற்க வேண்டும். கல்வி வெறுமனே கற்காமல் புரிதலோடு இருக்க வேண்டும்.

60 ஆண்டு சினிமாதுறையில் நிறைவு பெற்றதையொட்டி எனக்கு விழா எடுப்பதாக கூறுகிறார்கள்? அந்த விழா நான் சாதித்து முடித்ததற்கு அல்ல என்னை பொறுத்தவரை தமிழகத்தில் அடுத்து ஒரு புதிய புரட்சிக்கு அடித்தளமாக இருக்கும். மாணவர்கள் ஏன் அரசியலில் ஈடுபடவில்லை? எத்தனை நாள் மாணவர்களாக இருப்பீர்கள்.?

மாற்றத்தை நிகழ்த்த அரசியலில் மாணவர்கள் தேவை. நீங்கள் வரவேண்டும். நான் உங்களை வரவேற்கிறேன். முதல் ஆளாக உங்களை அரசியலுக்கு அழைக்கிறேன்’ என்று பேசினார். அதனைத்தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, ’முதல்வர் ஆன உடன் முதல் கையெழுத்து என்பது குறுகிய கால விஷயம். ஆனால் நான் நீண்ட கால தீர்வு சொல்கிறேன். அது தான் நேர்மை. நான் நேர்மையாக இருப்பேன். எவன் வந்தாலும் இருக்கனும்" என கூறினார்.

விவசாயம் சரியில்லை என்ற வெறும் கோவத்துடன் இளைஞர்கள் களத்திற்கு வராமல் முறையான பயிற்சி பெற்று விவசாயத்தை காக்க வரவேண்டும். விவசாயத்திற்கு ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களைத் தேர்ந்தெடுத்து முறையாக வாருங்கள் என விவசாயம் செய்ய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அரசியலுக்கு மாணவர்கள் வர வேண்டும் என கூறுகிறீர்கள். ஆனால் அரசியல் அசுத்தமாக உள்ளதே என நிகழ்ச்சியில் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், ஸ்வட்ச் பாரத் என்று சொல்லும் போது குப்பையும் சாக்கடையும் உள்ள இடத்திற்கு தானே பிரதமர் அழைக்கிறார். குப்பையும் சாக்கடையும் இருக்கும் இடத்தில் தான் சுத்தம் செய்ய முடியும். அது போல தான் அரசியலும், குப்பையும் சாக்கடையுமாக இருக்கும். அரசியலில் வந்து சுத்தம் செய்யுங்கள்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: October 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading