Home /News /tamil-nadu /

உள்ளாட்சித் தேர்தல்: மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி - கமல்ஹாசன் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி - கமல்ஹாசன் அறிவிப்பு

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் ஊரக, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6-ம் தேதி, அக்டோபர் 9-ம் தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளநிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே, பா.ம.க, தே.மு.தி.க, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

    இந்தநிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள அறிக்கையில், ‘9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி  மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நமது முதல் உள்ளாட்சித் தேர்தல் இது. புதிய உத்வேகத்துடனும் ஆற்றலுடனும் இந்தத் தேர்தலை எதிர்கொள்வோம். களத்தில் நிற்கும் உங்கள் கரங்களுக்கு வலுச்சேர்க்க நானும் உங்கள் பகுதிக்கு வருகை தரவிருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகப் போட்டியிட விரும்புபவர்கள் அந்தந்த மாவட்டத் தலைமை அலுவலகம் மற்றும் மாநிலத் தலைமை அலுவலகத்தில் நேரடியாக விருப்ப மனுப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். உடனடியாக விண்ணப்பிக்கும் பொருட்டு ஆன்லைன் வசதியும்( https://maiam.com/application-form.php )  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மாவட்ட, மாநில தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளைத் தொடர்புகொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Kamal hassan, Local Body Election 2021, Makkal Needhi Maiam

    அடுத்த செய்தி