தி.மு.க எம்.எல்.ஏ மகள் திருமணம்! மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் ஒரே மேடையில் பங்கேற்பு

கமல்ஹாசனை தி.மு.க அதிகாரப் பூர்வ நாளேடான முரசொலியில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

news18
Updated: February 11, 2019, 10:29 AM IST
தி.மு.க எம்.எல்.ஏ மகள் திருமணம்! மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் ஒரே மேடையில் பங்கேற்பு
மு.க.ஸ்டாலின் - கமல்ஹாசன்
news18
Updated: February 11, 2019, 10:29 AM IST
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மகளின் திருமண விழாவில் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். இருவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியூஸ் 18- தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், தி.மு.க, அ.தி.மு.க இருகட்சிகளும் ஊழல் கட்சிகள். அவர்களுடன் கூட்டணி வைக்கமாட்டேன்’ என்று தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து, கமல்ஹாசனை தி.மு.க அதிகாரப் பூர்வ நாளேடான முரசொலியில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். இந்தநிலையில், இன்று, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மகளின் திருமணம் திருவான்மியூரில் வைத்து நடைபெற்றது. அந்த திருமணம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

திருமண விழாவில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், எம்.பிக்கள் கனிமொழி, ஆர்எஸ் பாரதி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏக்கள் பொன்முடி, சுதர்சனம், மா.சுப்ரமணியன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தி.மு.கவை கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தநிலையில், கமல்ஹாசனும் மு.க.ஸ்டாலினும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இருவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர். இருவரும் அருகருகே இயல்பாக பேசிக் கொண்டனர். இந்தநிலையில், பா.ஜ.கவைச் சேரந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்துகொண்டார். அவரும் ஸ்டாலினுக்கு அருகில் அமர்ந்துள்ளார்.

Also see:

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...