+2 மாணவர்களுக்கு கமல்ஹாசன், விஜயகாந்த் வாழ்த்து!

பல அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று விஜயகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

news18
Updated: April 19, 2019, 1:39 PM IST
+2 மாணவர்களுக்கு கமல்ஹாசன், விஜயகாந்த் வாழ்த்து!
பல அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று விஜயகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
news18
Updated: April 19, 2019, 1:39 PM IST
+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. தமிழகத்தில் +2 பொதுத்தேர்வில் 91.03% பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 88.57% பேரும், மாணவிகள் 93.64% பேரும் தேர்ச்சி பெற்றனர்.இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்தது. திருப்பூர் மாவட்டத்தில் 95.37% பேரும், ஈரோடு மாவட்டத்தில் 95.23% பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 95.15% பேரும் தேர்ச்சி பெற்றனர்.

தேர்வி எழுதிய மாணவர்களுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேர்வு எழுதிய ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் வாழ்த்துகள். இதுவே முழுமையான வெற்றி. இவ்வெற்றி தொடரட்டும்.உங்களுக்குப் பிடித்ததையும் எந்தத் துறையில் நீங்கள் திறமையானவர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதிலும் கவனம் செலுத்துங்கள். நாளை நமதே என்கின்ற நல்வாழ்த்துக்களுடன் உங்கள் நான்.’ என்று பதிவிட்டுள்ளார்.இதே போல் தேமுதிக தலைவர் விஜயகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில், +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும், தேர்ச்சி பெற உதவிய ஆசிரியர்களுக்கும், உறுதுணையாக இருந்து வழிநடத்திய பெற்றோர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். பல அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’ என்று பதிவிட்டுள்ளனர்.RELATED STORIES:

Also watch

First published: April 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...