உலகநாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கமலஹாசன், பரமக்குடியை பூர்வீகமாக கொண்டவர். தமிழ்த்திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழும் அவருக்கு இன்று பிறந்தாநாள் வாழ்த்து கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி அவரின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டிய நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒட்டுவதன் மூலம் மக்கள் கவனத்தைப் பெற முயற்சிப்பது இப்போது ட்ரண்டாகி வருகிறது.
அந்த வகையில், நவம்பர் 7ம் தேதியான இன்று கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் மதுரையில் வித்தியாசமான போஸ்டர்களை ஒட்டி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அந்த போஸ்டரில் கமல்ஹாசன் அவர்களை கிருஷ்ணராகச் சித்தரித்து ”பாரதத்தின் பரமபிதாவே” என்றும் குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறி மதுரை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal hassan, Makkal Needhi Maiam