சென்னையில் வரும் நவம்பர் 2 , 3 தேதிகளில் தேர்தல் ஏற்பாடு குறித்து 500-க்கு மேற்பட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூட்டம் அக்டோபர் 16-ஆம் தேதி சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் சுமார் 40 நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொண்டனர்.
தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் அடுத்து மாநிலம் முழுக்க இருக்கும் கட்சி நிர்வாகிகளை கமல் சந்திக்க இருக்கிறார். வரும் 2, 3 தேதிகளில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது.
மாநில அணிகளின் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என சுமார் 500க்கு மேற்பட்ட நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்த உள்ளார்.
Also read... கொரோனாவுக்கு ரூ.7,372 கோடி செலவிடப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி தகவல்
கொரோனா சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் 2 நாட்களில் 3, 3 பகுதிகளாக இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.
ரஜினியின் அரசியல் முடிவில் தயக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் கமல்ஹாசன் தனது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். தமிழக அரசியலில் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal Haasan, Makkal Needhi Maiam