2021ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தின் முதல் அமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசனை தேர்வு செய்தது மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம்.
மநீம கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டம் தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அப்போது கமலுக்கு செண்ட மேளம் அடித்து பூக்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுமார் 40 பேர் கலந்துகொண்ட கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் 2 மணி நேரம் நடந்தது.
கூட்டத்தின் முடிவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் துணைத்தலைவர் மஹேந்திரன் மற்றும் பொதுச்செயலர் அருணாசலம், முதல்வர் வேட்பாளராக கமலை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க செயற்குழு முடிவு செய்திருப்பதாக கூறினார்.
தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் அதுகுறித்த முடிவெடுக்கவும் கமலுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
Also read... பிக்பாஸ் வீட்டில் முகமூடிகள் அவிழ ஆரம்பித்துவிட்டது: இந்த வாரம் வெளியேறப்போவது யார்?... கமல் சூசகம்!
தேர்தலுக்காக வேட்பாளர் தேர்வுக்குழு, வேட்பாளர் பயிற்சிக்குழு உள்ளிட்ட 5 குழுக்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குழுக்கள் அமைப்பது பற்றி முடிவெடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கிராமசபை கூட்டத்தை நடத்தாத ஆளுங்கட்சியை கண்டித்து தீர்மானமும், அதனை சட்டப்போராட்டம் நடத்தி நடத்த வைக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal Haasan, Makkal Needhi Maiam, TN Assembly Election 2021