ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Hijab விவகாரம்... ‘தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது’ - கமல் ஹாசன் எச்சரிக்கை ட்வீட்

Hijab விவகாரம்... ‘தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது’ - கமல் ஹாசன் எச்சரிக்கை ட்வீட்

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

Hijab row : தமிழகத்தில் முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது என கமல் ஹாசன் பதிவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் (Hijab) அணிந்துவர ஒருசில கல்வி நிலையங்கள் தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாதது, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருசில இந்து மாணவ, மாணவியர் காவித் துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வர தொடங்கியது என இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

  ஹிஜாப் விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மாண்டியாவில் உள்ள பிஇஎஸ் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவி ஒருவர் பர்தா அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காவி துண்டு அணிந்திருந்த மாணவர்கள் சிலர் அவரை முற்றுகையிட்டு ஜெய் ஸ்ரீராம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  இதற்கிடையில், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை “மாணவர்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாணவர்களிடையே மோதல்கள் ஏதும் ஏற்படாதவாறு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

  Must Read :கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளோம் : நிதி அமைச்சர் பி.டி.ஆர்

  இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன், "கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது" என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

  கர்நாடகாவை தொடர்ந்து புதுச்சேரியில் அரியாங்குப்பம் அரசுப் பள்ளியில் மாணவி ஒருவரது ஹிஜாப்பை அகற்றுமாறு பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாக புகார் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Kamal Haasan, Karnataka